இத்தாலி பிரதமர் ராஜினாமா!

இத்தாலியில் அரசியலில் கூட்டணி கட்சிகளின் பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலி பிரதமர் ராஜினாமா!

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். தற்போது இத்தாலியில் பொருளாதார நிலை மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது, இந்த வாக்கெடுப்பில் கூட்டணி கட்சியில் உள்ள பெரிய காட்சிகளில் ஒன்றான பைவ் ஸ்டார் மூவ்மெண்ட் கட்சி பங்கேற்காததால், நேற்று திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மரியோ டிராகி அறிவித்தார்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரல்லாவிடம் கொடுக்க, அதிபர் அதை நிராகரித்துள்ளார். இதனால் அங்கு ஆளும் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.