ஆப்கனில் இருந்து படைகளை விலக்கிய விவகாரம் - மக்களிடம் செல்வாக்கை இழந்தார் ஜோ பைடன்..?

அமெரிக்கா மக்களிடையே அதிபர் ஜோபைடன் தனது செல்வாக்கை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கனில் இருந்து படைகளை விலக்கிய விவகாரம் - மக்களிடம் செல்வாக்கை இழந்தார் ஜோ பைடன்..?

ஜோபைடனின் உத்தரவை ஏற்று அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

தங்களை காப்பாற்றும் படி ஆப்கன் மக்கள் மன்றாடி கேட்டுக் கொண்ட போதும், படைகளை திருப்பி அழைக்கும் முடிவில் இருந்து ஜோபைடன் பின்வாங்க வில்லை.

இதன் விளைவாக ஆப்கனின் தற்போது உச்சபட்ச பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக அதிபர் ஜோபைடன் மீது அமெரிக்க மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், அமெரிக்க அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்க வேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய கணக்கெடுப்பில் கமலா ஹாரீஸ் அதிபராக பதவியேற்க முழு தகுதியுடையவர் என 43 சதவீததினர் ஆதரவு தெரிவித்த நிலையில் 55 சதவீதத்தினர் அவர் தகுதியானவர் அல்ல என வாக்களித்துள்ளனர்.