மியான்மர் பொதுமன்னிப்பு தினம்...உலக குற்றவாளிகள் விடுதலை!!

மியான்மர் பொதுமன்னிப்பு தினம்...உலக குற்றவாளிகள் விடுதலை!!

மியான்மரின் தேசிய பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு 5,744 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், 2021 இல் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.  

மியான்மரில் 1 பிப்ரவரி 2021 அன்று நாட்டின் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான சதிப்புரட்சிக்குப் பின்னர் இராணுவ ஆட்சி அமலில் உள்ளது. மியான்மருக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் போமன், ஆகஸ்ட் மாதம் யாங்கூனில் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார்.  

ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், என்பவரை பாதுகாப்புப் படையினர் செப்டம்பர் மாதம் யாங்கூனில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்தனர்.  இரகசிய சட்டம் மற்றும் குடியேற்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இதைப்போலவே இன்னும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் ஆட்சியின் கீழ் இவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது தேசிய பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யவுள்ளது மியான்மர் ராணுவ அரசு.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    புதுப்பிக்கப்படுமா சாகர் உணவு ஒப்பந்தம்?!! ஐநா கூறுவதென்ன?!!