செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தில் பதிவான ரேடார் சமிக்ஞைகள் தண்ணீர் இருப்பதற்கான அடையாளம் அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்

சூரியனை சுற்றி 4வது கோளாக வலம் வரும், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகளை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதற்கென விண்வெளி நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்திற்கு ரேடார் கருவிகளை அனுப்பி வைத்து அதிலிருந்து வெளிவரும் சமிக்ஞைகளை ஆய்வு செய்து வருகின்றன.

இதனிடையே செவ்வாய் நிலப்பரப்பில் வறண்ட குளம் போன்ற சிறிய நீர்நிலைகள் இருப்பதாக அண்மையில்  ஐரோப்பா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவை தண்ணீர் அல்ல என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.