மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 39 பேர் பலி!

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், 39 பேர் பலியான நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

ஈராக்கின் தெற்கில் உள்ள திகார் மாகாணத்தின் நாசிரியா நகரத்தில் செயல்பட்டு வந்த கொரோனா மருத்துவமனையில், நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ விபத்தில் சிக்கி, 2 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒருவழியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.