பாகிஸ்தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதால் பாகிஸ்தானில், பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 40 ரூபாயும் குறைத்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...!

சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் - இ - இன்ஸாப் கட்சி கவிழ்ந்தது. பின்னர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையிலான ஆட்சி அமைந்து, 3 மாதங்கள் ஆகிறது. இந்த சூழ்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.  

இந்நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாய் 50 காசுகளும், டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் 54 காசுகளும் குறைத்து உத்தரவிடபட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் இந்த முடிவை அறிவித்துள்ளார்.