சீன குடியரசுத் தலைவருக்கு புடின் வாழ்த்து!

சீன குடியரசுத் தலைவருக்கு புடின் வாழ்த்து!

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அந்நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பார். இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3 ஆவது முறையாக குடியரசுத் தலைவராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.  

ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

சீனாவில் ஒருவர் 2 முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அமெரிக்காவுடன் மோதல் போக்கு, தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு இடையில் சீன அதிபராக ஜின்பிங் 3 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.