ரணில் விக்ரமசிங்கே வீட்டைத் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்:

இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ரணில் விக்ரமசிங்கே வீட்டைத் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்:
இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் பிரதமரின் வீட்டை நோக்கி படையெடுத்த போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி வீட்டிற்குள் புக முயன்றனர். இதையடுத்து போலீசார் இரண்டு முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இருப்பினும் பிரதமரின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
 
தொடர்ந்து, பிரதமர் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.  
 
இதனையடுத்து பிரதமரின் வீட்டின் அருகே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய தடியடியில் ஊடகவியலாளர்கள் 7 பேர் உட்பட 64 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த 64 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
டாஸ் வென்றும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்திலாவது வெற்றிப் பெறுமா என்ற கேள்வி கிளம்பியுள்ளது!.