எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள்... இந்திய தூதரிடம் முறைப்படி ஒப்படைப்பு...

அமெரிக்காவின் சான் டியாகோ விமானப்படை தளத்தில் இரண்டு எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் முறைப்படி இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து- விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள்... இந்திய தூதரிடம் முறைப்படி ஒப்படைப்பு...
அந்நிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் திட்டத்தின் கீழ், 24 என்ற எண்ணிக்கையிலான எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை, 17 ஆயிரத்து 832 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வங்கியுள்ளது. எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
 
மேலும், எம்.எச். 60 ரோமியோ ஹெலிகாப்டர்களில், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஹெல் ஃபைர் ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே. 54 ரக நீர்மூழ்கி குண்டுகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும்.
இந்த நிலையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்கா விமானப்படை அதிகாரிகள் சான் டியாகோ விமானப்படை தளத்தில் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து-விடம் முறைப்படி ஒப்படைத்தனர். அப்போது இந்திய கடற்படை துணைத் தலைவர் ரவ்னீத் சிங் உடனிருந்தார்.