ரஷ்யாவின் ஆபத்தான எரிமலை வெடிப்பு....!!

ரஷ்யாவின் ஆபத்தான எரிமலை வெடிப்பு....!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்து வரும் போருக்கு இடையில், தற்போது மற்றுமொரு ஆபத்தும் உருவாகி உள்ளது.  ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள ஷிவ்லுச் எரிமலை வெடித்ததால், சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் குவியல் உருவாகியுள்ளது.

ரஷ்யாவில் எரிமலை வெடித்ததை அடுத்து, விமான போக்குவரத்து துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த எரிமலையில் 15 கிலோ மீட்டர் உயரம் வரை எந்த நேரத்திலும் வெடிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  கம்சட்கா தீபகற்பத்தின் முனிசிபல் அதிகாரிகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  மேலும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 70 கிலோமீட்டர் தொலைவு வரை புகை பரவியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  எனவே மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  ஷிவ்லுச் எரிமலைக்குள் எரிமலைக் குழம்பு வேகமாக வெளியேறி வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும் அதன் பள்ளத்தில் இருந்து ஏராளமான நீராவியும் வாயுவும் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார் 

இதையும் படிக்க:   “கடந்த கால செயல்களுக்கு பிராயச்சித்தம் என்றால்.....” மோடி மீதான விமர்சனும் பதிலடியும்!!