5 பேரை பலிவாங்கிய மியாமி கட்டிட விபத்து... 156 பேரை காணவில்லை...

அமெரிக்காவின் மியாமியில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 பேரை பலிவாங்கிய மியாமி கட்டிட விபத்து... 156 பேரை காணவில்லை...
புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம், சீட்டுக்கட்டு போல் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 156 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை எனவும், மியாமி-டேட் பகுதி மேயர் டேனியல்லா லெவின் காவா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் மற்றும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.