பயங்கரவாதிகள் வரிசையில் தலிபான்கள்.. பதிவுகளை நீக்கியது பேஸ்புக்

சமூக வலைதளமான பேஸ்புக், தலிபான்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு, அவர்களது பதிவுகளை நீக்கியுள்ளது.

பயங்கரவாதிகள் வரிசையில் தலிபான்கள்.. பதிவுகளை நீக்கியது பேஸ்புக்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பழமைவாதிகள் அந்நாட்டு மக்களை ஒடுக்கி வந்தனர்.

அமெரிக்கப்படை அங்கு நுழைந்த பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், அவர்கள் தொடர்ச்சியாக நாட்டை கைப்பற்ற போராடினர்.

இந்நிலையில், தலிபான்கள் தற்போது ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில் தலிபான்களை பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ள பேஸ்புக், அவர்கள் தொடர்பான பதிவுகளை அகற்றியுள்ளது.

இருப்பினும் வாட்ஸ்அப், பேஸ்புக்கின் மெசஞ்சர் என்ற செயலியை பயன்படுத்தி தலிபான்கள் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி வருவதாக கூறப்படுகிறது.