மசூதியில் நடைபெற்ற கொடூர குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு...

ஆப்கானிஸ்தானில் நேற்று மசூதியில் நடைபெற்ற கொடூர குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மசூதியில் நடைபெற்ற கொடூர குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு...

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன . அதே போல் தலிபான்களுக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் .

இந்நிலையில் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் நேற்று தொழுகையின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 143 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது . ஷியா பிரிவை பின்பற்றும் ஹஸாரா எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

 இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கான் பிரிவான ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தக் தாக்குதலுக்கு ஐ.நா சபை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் நடைபெற்றுள்ள மிகப் பெரிய வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பில் அன்புக்கு உரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக வெள்ளை மாளிகை செய்து வெளியிட்டுள்ளது. ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது மிகவும் துயரமானது.