நெருக்கடிகளுக்கு நடுவே கூடும் இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்ட நிலையில், பெரும் நெருக்கடிகளுக்கு நடுவே இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

நெருக்கடிகளுக்கு நடுவே கூடும் இலங்கை நாடாளுமன்றம்!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை சமீபத்தில் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், வெளிநாட்டில் இருந்தவாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கை இடைக்கால அதிபராக நியமித்தார்.

தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே, ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு இமெயிலில் அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். இதையடுத்து வரும் 20ம் தேதி நாடாளுடன்றத்தின் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் எனவும் வேட்புமனுக்கள் 19ம் தேதி பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இடைக்கால அதிபர் மற்றும் எம்பிக்களின் பங்கேற்புடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.