ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றதாக சொன்ன பெண் கர்ப்பமாகவே இல்லையாம்.! விசாரணையில் வெளிவந்த உண்மை.!  

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றதாக சொன்ன பெண் கர்ப்பமாகவே இல்லையாம்.! விசாரணையில் வெளிவந்த உண்மை.!  

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக வந்த தகவல் தவறானது என்று தற்போது தெரியவந்துள்ளது. 

ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கர்ப்பம் தரித்து கடந்த 7-ம் தேதி அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 10 குழந்தைகள் பிறந்தன என்று பெரும்பாலான செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

10 குழந்தைகள் பிறந்ததாக உள்ளூர் மேயர் அறிவித்தபிறகே செய்தித்தளங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. ஆனால் அதன் தொடர்ச்சியாக அதைப் பற்றி விசாரிக்கையில்  ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை சித்தோல் என்ற பெண் பெற்றெடுத்ததாக வெளியான தகவலின் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த விசாரணையில் சித்தோல் கர்ப்பமாகவே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரை காவல்துறை விசாரணைக்கு உற்படுத்தி அவரது மனநலத்தை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.