ஒற்றையாட்சி முறையையை கைவிடும் வரையில்.... செல்வராசா கஜேந்திரன்!!

ஒற்றையாட்சி முறையையை கைவிடும் வரையில்.... செல்வராசா கஜேந்திரன்!!

ஒற்றையாட்சி முறையையை கைவிடும் வரையில் தாம் பேச்சுக்கு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இன்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.  இன்று தொடங்கிய இப்பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்தப் பேச்சுக்களில் தாம் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுக்களில் கலந்துகொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் தாம் அதில் கலந்துகொள்ளவில்லை எனவும், ஒற்றையாட்சி முறையையை கைவிடும் வரையில் தாம் பேச்சுக்கு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லையென அவர் இந்த ஊடகச்சந்திப்பில் குறிப்பிட்டு கூறினார்.

இதையும் படிக்க:   சிறுமியை ஏமாற்றி உயிரை எடுத்த இளைஞர்....!!!