பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதியா?!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதியா?!!!

நவம்பர் 3 அன்று, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் வஜிராபாத்தில் அவரது வலது காலில் சுடப்பட்டார்.   தாக்குதலின் போது, ​​அவர் ஒரு ட்ரக் மீது நின்று  உரையாற்றிக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி எனவும் இஸ்லாமாபாத் வருகையின் போது அவரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டின் சிபிஐ அமைப்பு கூறியுள்ளது.

விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கும் போது பிரச்சார உரையின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் 70 வயதான கானைக் கொல்ல செய்ய முயன்றதை  கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிந்துகொள்க:   ”நடிப்பில் ஷாருக்கான் சல்மான் கானை மிஞ்சிய இம்ரான் கான்” மௌலானா கூறக் காரணமென்ன?!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் நவீத் எனவும் அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் என்றும், தாக்குதல் நடந்த போது அவரது கும்பல் உறுப்பினர்களுடன் அந்த இடத்தில் இருந்ததாகவும் அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.  உண்மை கூறும் பாலிகிராப் தேர்விலும் நவீத் தோல்வியடைந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவாக உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தேர்வு அட்டவணையை வெளியிட்ட சிபிஎஸ்இ...!!!