சீனாவின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமா அமெரிக்கா...கடிதத்தில் இருந்தது என்ன?!!

சீனாவின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமா அமெரிக்கா...கடிதத்தில் இருந்தது என்ன?!!

அமெரிக்க செனட்டர்களான ஜிம் ரிஷ் மற்றும் மிட் ரோம்னி ஆகியோர் பைடனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பைடென் நிர்வாகம் சீன குடியரசிற்கு எதிராக ஒரு விரிவான தீர்வை கொண்டு வர வேண்டும் என்று எழுதியுள்ளனர்.  தற்போது இந்த கடிதத்தின் நகல் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்தவும்,  அச்சுறுத்தல்களைச்  சமாளிக்கவும் அமெரிக்காவில் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி ஜோ பிடனுக்கு எழுதிய கடிதத்தில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இரண்டு செல்வாக்குமிக்க செனட்டர்கள், சீனா தொடர்பாக ஒரு முக்கிய தீர்வை அவர் வகுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.  

அமெரிக்க செனட்டர்களான ஜிம் ரிஷ் மற்றும் மிட் ரோம்னி ஆகியோர் வியாழன் அன்று எழுதிய கடிதத்தில், சீன குடியரசிற்கு எதிராக ஒரு விரிவான தீர்வை பைடன் நிர்வாகம் தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  இந்த கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சீனாவின் அடாவடித்தனத்தை தடுக்க அமெரிக்கா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியா, ஜப்பான் மற்றும் தைவான் மீது சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க செனட்டர்கள், சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதற்கான உதாரணங்களையும் கடிதத்தில் விவரித்துள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   "இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த விருது அங்கீகாரம்" குடும்பநலத் துறை அமைச்சர்!!!