உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித்க்லைன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் முதன்முதலில் மலேரியாவுக்கு தடுப்பூசியை தயாரித்தது. ஆனால் அதற்கு செயல்திறன் குறைவாக இருந்ததால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு முதல் கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் உலக சுகாதார அமைப்பிடன் சமர்பித்த நிலையில் அதனை ஆராய்ந்த நிபுணர்கள் உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஆப்பிரிக்காவை சேர்ந்த சிறுவர்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.