இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்!

இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்!

கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிட இலங்கை அரச தலைமை வழக்குரைஞரின் தலையீட்டு உறுதிமொழியை கோருகிறார்கள்.

அரசியல் கைதிகளை சந்தித்த மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசினார். இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள  மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிட, இலங்கை அரச தலைமை வழக்குரைஞரின் தலையீட்டு உறுதிமொழியை கோருகிறார்கள். அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்றி, அரச தலைமை வழக்குரைஞர் தலையிடமாட்டார் என அவர்களுக்குச்  சொன்னேன்.  

அரசியல் தீர்வு

இலங்கை அதிபருடன் இவ்விவகாரம் பற்றியும் நடத்திய பேச்சு விவரங்களை கூறினேன். தேசிய இனப் பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு வருவதற்கு முதல் காத்திரமான நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது  என வலியுறுத்தி உள்ளேன். இவ்வரிசையில் முதல் நடவடிக்கையாக அரசியல் கைதிகள் விடுதலையையே நாம் கருதுகிறோம். எஞ்சியிருக்கும் தமிழ் கைதிகளை பிணை, வழக்கை திரும்பப் பெறுதல், பொதுமன்னிப்பு ஆகிய முறைகளில்  விடுவிக்கும் காலம் உதயமாகி விட்டது. நம்பிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.