தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது

நவம்பர் மாதம் முதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான பயண தடையை முழுவதுமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை பாடாய்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவை சிகப்பு பட்டியலில் வைத்தது. இதேபோல் அமெரிக்காவும் இந்தியாவை கொரோனா அதிகம் உள்ள நாடு என்ற பட்டியலில் வைத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் தடுப்பூசியின் 2 முழு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கான பயண தடையை முழுமையாக நீக்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.