புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் -ரணில் விக்ரமசிங்க!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் -ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க  அமெரிக்கா  அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா பவரின் இலங்கை பயணம்

இரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு  ஒத்துழைப்பு  வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார். ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சமந்தா பவருக்கு விளக்கமளித்த இலங்கை அதிபர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாகவும் எடுத்துரைத்தார். 

 அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் பொதுசன வாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் அதிபர் இதன் போது சுட்டிக்காட்டினார். இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.      


இலங்கைக்கு அமெரிக்காவின் உதவி

 இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி
நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார். ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக  சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமந்தா பவர் மேலும்  சுட்டிக்காட்டினார். 

 எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின், தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்  என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன் மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும்  சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் 
மேலும்  தெரிவித்தார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திர மற்றும் திறந்த இந்து- பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் சமந்தா பவர் இதன் போது வலியுறுத்தினார்.