இரண்டு பாலஸ்தீன போராளிகள் சுட்டுக் கொலை

இரண்டு பாலஸ்தீன போராளிகள் சுட்டுக் கொலை

மேற்குகரைப் பகுதியில் இரண்டு அல் ஃபதா கட்சியினர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் என்பது யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அரபு மொழி பேசும் மக்களின் நாடாகும். மெல்ல அங்கு யூதர்கள் குடியேறத் தொடங்கி பின்பு தங்கள் பெரும்பான்மையாக குடியேறிய பகுதிகளை இஸ்ரேல் என்ற தனிநாடாக அறிவித்தனர். பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்தனர். சில நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தனர்.

ஆயுதக் இயக்கங்கள்

தங்கள் தாயகத்தை இழந்த பாலஸ்தீன மக்கள் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் போராளிக் குழுக்கள் தோன்றின. ஹமாஸ் மற்றும் அல் ஃபதா என்னும் இரண்டு அமைப்புகள் தான் வலுவான இராணுவப் பிரிவுகளை கொண்டுள்ளது.

கொல்லப்பட்ட போராளிகள்

முன்னதாக பாலஸ்தீனின் நபுலஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் போராளி இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்  இஸ்ரேல் பாதுகாப்புப் படை அங்கு சோதனையிட்டது. அப்போது, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதை உறுதி செய்த பாலஸ்தீன் சுகாதார அமைச்சகம் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.  அல் ஃபதா கட்சியின் இராணுவப் பிரிவான அல்-அக்ஸா போராளிக் குழு கொல்லப்பட்ட இருவரும் தங்களது உறுப்பினர்கள் என்று அறிவித்துள்ளது.