12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி.... அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!

12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி.... அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற கோரி முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் என் .எஸ் .அசோகன்,  தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம் மாவட்ட துணை செயலாளர் திராவிட மணி மாநில துணை செயலாளர் சவுதிராஜ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும், ஒன்றிய  செயலாளர் திருஞானம் தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஜி.சேகர், நகர தலைவர் கந்தசாமி, நகர துணை செயலாளர்அய்யப்பன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் முதனைமூர்த்தி மற்றும்,  இந்திய குடியரசு கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அதோடு, மாவட்டசெயலாளர் கதிர்வேல் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் கலைச்செல்வன், வட்டக்குழு உறுப்பினர்கள் சுந்தரவடிவேல், ஜெயமணி .நெல்சன் சின்னதம்பி, மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் சி.ராஜு, எஸ்.கே. செந்தாமரைகந்தன் , மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜெ.காதர்ஷரிப்,  மாவட்டசெயலாளர் ராஜசங்கர், மாவட்டசெயலாளர் ராமர் அருள், தமிழ்தேசிய மக்கள் முன்னணி இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து கட்சி தொண்டர்கள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையும் படிக்க   }  12 மணி நேர வேலை சட்டம்...!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...!!