சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா


கர்நாடக 2023-ம் ஆண்டுக்கான கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அரசியலில் இருந்து தான்  விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா புதன்கிழமை அறிவித்திருப்பதாக  செய்தி நிறுவனமான  ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா வருகிற இந்த சட்டமன்றத் தேர்தல் தான் வேட்பாளராக போட்டியிடும் இறுதித் தேர்தல் என்று மைசூரில் உள்ள வருணாவில் நடைபெற்ற பேரணியில் அறிவித்தார். 

வருணா தொகுதியில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் பேசினார். அப்போது  அவர், "இந்த சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன். வருணா மக்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவின் காரணமாக, எனது அரசியல் வாழ்க்கையில் நான் பல இடங்களை அடைந்துள்ளேன்",  எனக் கூறினார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில்,  தனது பாரம்பரியமான தொகுதியான வருணா தொகுதியில் போட்டியிடுகிறார், மேலும் கோலார் தொகுதியில் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது, அங்கு அவர் ஏற்கனவே அவர் போட்டியிடுவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் சித்தராமையா முதல்வர் பதவியில் முனைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதையும் படிக்க |ஆதிதிராவிட பள்ளிகளை பள்ளி கல்விதுறையின் கீழ் இணைத்தால்....மீண்டும் சாதியபாகுபாடுகள் அதிகரித்துவிடும் .!-பூவை ஜெகன் மூர்த்தி

இவ்வாறிருக்க, சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா தற்போது வருணாவின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் தான் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். மேலும் அவர், தான்  எந்த தொகுதியிலும் போட்டியிட போவதில்லை எனவும், வருணா தொகுதி எந்த தனி நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் குறிப்பிட்டார். 

கர்நாடக தேர்தலில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியலில் சித்தராமையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், பின்னர் அந்த இடம் முல்பாகலின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான  கோத்தூர் மஞ்சுநாத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

 இதையும் படிக்க | மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!