பட்டியல் சமூக மக்களை இழிவு படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

பட்டியல் சமூக மக்களை இழிவு படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  நகர் மன்ற தலைவியாக  திமுக நகர செயலாளரான ராஜேந்திர குமார் என்பவரது  மனைவி  கவிதாமணி இருந்து வருகிறார்.  நகராட்சி ஆணையாளராக  விநாயகம்  என்பவரும், 3 வது  வார்டு திமுக  கவுன்சிலருமாக  தினேஷ் குமாரும் இருந்து வருகின்றனர்.  

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாராணாபுரம் பகுதியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த சிலர் தங்கள் பகுதி  பிரச்சனை குறித்து நகராட்சி தலைவி கவிதாமணி ராஜேந்திர குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்ததாகவும் , அதனை தொடர்ந்து  இது குறித்து தகவலறிந்து கவிதாமணி உறவினரான  தினேஷ் குமாருக்கும் தனது கணவர் ராஜேந்திர குமாருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் 3 வது  வார்டு திமுக  கவுன்சிலர் தினேஷ்  குமாரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வைரலாகி பல்லடம் பகுதியில்  பொது மக்களிடையே  பேரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் இந்திய  ஒருமைப்பாட்டிற்கும் சமூக நல்லிணகத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையிலும்  சாதி உணர்வுகளை  தூண்டும் விதமாகவும்,இழிவுபடுத்தியும், மிரட்டல் விடுத்தும் நகராட்சி 3 வது  வார்டு திமுக கவுன்சிலர் தினேஷ் குமார் பேசிய ஆடியோவை  ஆதரமாகக் கொண்டு பல்லடம்  சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் அண்ணாதுரை என்பவர் மாவட்ட  காவல் கண்காணிப்பளர், மாவட்ட ஆட்சித் தலைவர், பல்லடம்  துணை காவல்  கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.  மேலும் இது குறித்து பல்லடம் குற்றவியல் நீதி மன்றத்தில்  சமூக ஆர்வலர் அண்ணாதுரை இது குறித்து வழக்கு  ஒன்றை தொடர்ந்திருந்தார்.  

இதனை விசாரித்த பல்லடம்  குற்றவியல் நீதிபதி  சித்ரா  இந்த புகார் தொடர்பாக பல்லடம் நகராட்சி ஆணையாளர்  விநாயகம் , நகராட்சி திமுக தலைவி  கவிதாமணி  ராஜேந்திர குமார், 3 வது வார்டு திமுக கவுன்சிலர் தினேஷ் குமார் ஆகியோர் மீதான புகார் குறித்து உரிய புலன் விசாரணை  மேற்கொண்டு அதன் அறிக்கையை  நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த  சம்பவம் தற்போது  பல்லடம்  நகர  திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  மாம்பழம் வாங்குகிறீர்களா... தேவை அதீத கவனம்!!