அரசு பள்ளியில் தான் கேட்ட பாடப்பிரிவை கொடுக்காமல் கட்டாய பாடத்தை படிக்க சொல்வதாக மாணவி தர்ணா..!

அரசு பள்ளியில் தான் கேட்ட பாடப்பிரிவை கொடுக்காமல்   கட்டாய பாடத்தை படிக்க சொல்வதாக மாணவி  தர்ணா..!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பாத்திமா.  10ம் வகுப்பு வேறு ஒரு அரசு பள்ளியில் முடித்துவிட்டு 11ம் வகுப்பு பயில வீட்டின் அருகில் புதிதாக உருவாக்கப்பட்ட  பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 

அப்போது, சேருவதற்கான படிவம் பூர்த்தி செய்யும்போது மாணவி பாத்திமா விருப்பப்பட்ட வணிகவியல் (Commerce) பாடப்பிரிவு கேட்டுள்ளார். 

மாணவி பாத்திமா 10ம் வகுப்பில் 377 மதிப்பெண் எடுத்துள்ளதால் மாணவி கேட்ட பாடப்பிரிவை வழங்காமல் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதால் (Computer Science with Maths) கணினி அறிவியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவை வழங்கி படிக்கும்படி கூறியுள்ளார். 

அதற்கு மாணவி பாத்திமா தனக்கு விருப்பம் இல்லாத ஒரு பாடப்பிரிவை படி படி என்று தன்மீது தினிப்பதாக குற்றம்சாட்டிய மாணவி மட்டும் அவரது பெற்றோர்கள் பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து மகள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் படிக்க வையுங்கள் என்று கேட்டும் அதற்கு சிறிதும் செவிசாய்க்காமல் தலைமை ஆசிரியர் சொல்லும் பாடப்பிரிவைதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களையும் கட்டாயபடுத்தியுள்ளதாகவும் ஒரு கட்டத்தில் இஷ்டம் இருந்தால் படியுங்கள் இல்லையென்றால் சான்றிதழை வாங்கி செல்லுங்கள் என்று கடுமையாக பள்ளியின் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டதாக தெரிவித்தனர். 

ஒரு மாதம் காலமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் போராடி நியாயம் கிடைக்காத நிலையில் மாணவி பாத்திமா அருகில் உள்ள பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியும் அவர் சொன்ன சொல்லில் உறுதியாக இருப்பதால் மாணவி கேட்ட பாடப்பிரிவை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். 

அதை தொடர்ந்து மாணவி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை தொடர்ந்து அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் பேசியபோது அவர்களின் பேச்சுவார்த்தைக்கும் செவிசாய்க்காமல் அதிகார தோரணையை காண்பித்துள்ளார். 

அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர் மாணவியிடம் பேசியபோது தனக்கு பிடித்த தான் கேட்கும் பாடப்பிரிவை கொடுக்காமல் தலைமை ஆசிரியர்க்கு விருப்பமான பாடப்பிரிவை வழங்கி என்னை வலுக்கட்டாயப்படுதுவதாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி தெரிவித்தார். 

அதை தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரை எமது செய்தியாளர் நேரில் சந்தித்து மாணவியின் தர்ணா போராட்டம் குறித்து கேட்டபோது :-  அரசு பள்ளியில் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவு கொடுக்க சட்டம் இல்லை என்றும் தாங்கள் கொடுக்கும் பாடப்பிரிவை மட்டும் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் செயலை கண்டித்து பள்ளி முன்பு மாணவி பாத்திமா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க    | "பால் கொள்முதல் விலையை உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை" அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!