பிங்க் படத்தில் இது இருக்காது... அஜித் படத்தில் இருக்கும்.. வலிமை படத்தின் அப்டேட் இதோ.... 

வலிமை படத்தில் 5 சண்டை காட்சிகள் இருக்கும் எனவும் பிங்க் படத்தில் இது இருக்காது எனவும் அப்டேட் வெளியாகி உள்ளது.

பிங்க் படத்தில் இது இருக்காது... அஜித் படத்தில் இருக்கும்.. வலிமை படத்தின் அப்டேட் இதோ.... 

இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் `நேர்கொண்டப் பார்வை` படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படமாக உருவாகி வருகிறது `வலிமை`. ஒரு வருடத்துக்கு மேலாக படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்னும் முடிந்தபாடில்லை.

இதற்கு காரணம் கொரோனாவால் படப்பிடிப்பு முடங்கியுள்ளதாகவும், ஒரு சில சீன்கள் மட்டும் வெளிநாட்டில் எடுக்க வேண்டியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
 
வலிமை படத்தில் நடிக்கும் நடிகர்களில் தொடங்கி தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரிடமும் சோசியல் மீடியாவில் அப்டேட் கேட்டுவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

சமீபத்தில் யுவன் ஷங்கர்ராஜா சோசியல் மீடியாவில் பேசும்போது, தாய்மையை மையமாகக் கொண்டு ஒரு பாட்டு படத்தில் இருக்கிறது என்றார். இப்படி, சின்ன சின்ன அப்டேட்டுகள் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. 

ஆனால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானப் பிறகுதான், முதல்பார்வை போஸ்டரை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் படக்குழு. திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதே உறுதியாக தெரியாத சூழல் நிலவுவதால் எப்படி, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது என்பதுதான் வலிமை அப்டேட் விடுவதில் இருக்கும் சிக்கல்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, ஓரிரு வாரத்தில் சென்னை வருகிறாராம் போனிகபூர். அதனால், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் எப்போது என்பது குறித்த உறுதியான தகவல் கிடைத்துவிடும்.
 
இது ஒருபக்கம் இருக்க, படம் குறித்த இன்னொரு தகவலும் கிடைத்திருக்கிறது. படத்தில் மொத்தமாக ஐந்து ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதில் ஒரு ஆக்ஷன் சீன் ஒன்பது நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.

ஏற்கெனவே, நேர்கொண்டப் பார்வையில் ஹெச்.வினோத் வைத்திருந்த ஆக்ஷன் காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. பிங்க் படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்காது. தமிழில், ரசிகர்களுக்காக சண்டைக் காட்சி படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தில் உளவுத்துறை போலீஸாக வரும் அஜித்துக்கு இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், அப்டேட்டுக்கு மட்டும் கொஞ்சம் பொறுமைக் காக்க வேண்டும்