KRK - வின் சென்சார் தகவலை வெளியிட்டது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ !

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சென்சார் தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

KRK - வின் சென்சார் தகவலை வெளியிட்டது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகின்ற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தற்போது அறிவித்திருக்கிறது.

அதில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘யூஏ’  சான்றிதல் என்பதால் 12 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்தலின்பேரில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று வழியுறுத்தப்படுகிறது.