பழைய வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்யும் உரிமையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு   

தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை வெளியேற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.

பழைய வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்யும் உரிமையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு    

தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை வெளியேற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.

பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்றும் வகையில் மத்திய அரசு புதிய வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியில்லாத வாகனங்களை அதன் உரிமையாளர்களே தானாக முன்வந்து அகற்றுவதை ஊக்குவிக்க மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, பழைய வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்யும் உரிமையாளர்களுக்கு அதற்கான டெபாசிட் சான்றிதழ் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி புதிய வாகனத்திற்கான பதிவுச் சான்றிதழ் கட்டண தள்ளுபடி, வரி தள்ளுபடி, புதிய வாகனம் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி போன்ற சலுகைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.