காபூலில் சிக்கியிருந்த 140 இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்பு...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிக்கியிருந்த 140 இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

காபூலில் சிக்கியிருந்த 140 இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்பு...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ள நிலையில் பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில் காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள் , தூதரக ஊழியர்கள் , செய்தியாளர்கள் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த ஞாயிறு அன்று ஏர் இந்தியா விமானம் மூலம் 129 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக விமானப்படை விமானம் சி-170 ஆப்கான் அனுப்பப்பட்டது.

அந்த விமானம் மூலம் இந்திய அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை தொடர்வதால் அங்கிருந்து வரும் மக்களை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.