மோடி பிற மாநிலங்களில் செய்வதை அவருக்கே திரும்பச் செய்த மமதா.! திரிணாமூல் காங்கிரசுக்கு தாவும் 23 பாஜக எம்.எல்.ஏக்கள்.?

மோடி பிற மாநிலங்களில் செய்வதை அவருக்கே திரும்பச் செய்த மமதா.! திரிணாமூல் காங்கிரசுக்கு தாவும் 23 பாஜக எம்.எல்.ஏக்கள்.?

மேற்குவங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மமதா பானர்ஜீயின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக 74 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பல இடங்களில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டதாக பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் இந்த தேர்தலுக்கு முன்  திரிணாமூல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு சென்ற பல தலைவர்கள் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருகின்றனர். மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்ற தொண்டர்கள் மன்னிப்பு ஊர்வலங்களை நடத்திவருகின்றனர். இப்படி மேற்குவங்க பாஜக முகாமே கலகலத்து போய் இருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக மேற்கு வாங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில்  "சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது. திரிணாமுல் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை காவல் துறை மூலம் 'பழிவாங்கும் வன்முறை' நடக்கிறது. சட்டத்திற்கு பயப்படாததால் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை நாளை (இன்று) நேரில் வந்து விளக்கும்படி தலைமைச் செயலாளர் எச்.கே.திவேதிக்கு உத்தரவிட்டு உள்ளேன்" என்று கூறினார். இது மேற்குவங்க அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜவுக்கு தாவி தற்போது எதிர்க்கட்சி தலைவராகவு ள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ எம்.எல்.ஏ. க்கள் நேற்று முன்தினம் மேற்குவங்க கவர்னரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் போது பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வருகை தருமாறு கூறப்பட்டிருந்தது. மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு 74 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் இந்த கூட்டத்திற்கு வெறும் 51 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வந்திருந்தனர். இது பாஜக தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக ஆளுநரை சந்திக்க வராத 23  பாஜக எம்.எல் .ஏக்கள் மமதாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ தயாராக இருக்கிறார்கள் என்று மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களில் பாஜக பிற கட்சிகளுக்கு செய்வதை மேற்குவங்கத்தில் மமதா பாஜகவுக்கு செய்கிறார் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது.