எதுலயாச்சும் கால விட்டுக்குறதே இதுக்கு வேலையா போச்சு....! சேற்றில் சிக்கிய யானையை பத்திரமாக மீட்ட சக யானை....!

எதுலயாச்சும் கால விட்டுக்குறதே இதுக்கு வேலையா போச்சு....! சேற்றில் சிக்கிய யானையை பத்திரமாக மீட்ட சக யானை....!

சத்தியமங்கலம் காட்டுக்குள் நீரோடையில் சிக்கிய யானையை சக யானை ஒன்று சாதுர்யமாக மீட்ட வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. மனிதனுக்கு மனிதனே உதவி செய்யாத நிலையில் ஐந்தறிவு ஜீவனின் பாசப் போராட்டம் பார்ப்போரை நெகிழச்  செய்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியதால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் குளிர்ச்சியான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. 

ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானையொன்று அரேப்பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியாக ஆடி அசைந்து உலா வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நீரோடையொன்றை கண்ட யானையானது, தன் தாகத்தை தீர்த்து கொள்ள அதனுள் இறங்கியது. வெகுநேரமாக நின்று இளைப்பாறி, தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே அதன் கால்கள் சேற்றில் சிக்கியது. சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கேயே வெகு நேரமாக காத்திருந்த யானையை வேடிக்கை பார்த்த மற்றொரு யானை அருகில் சென்றது. 

இதையும் படிக்க | துபாய் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...! குடும்பங்களுக்கு நிவாரணம்...!

எப்போ பார்த்தாலும் எதுலயாச்சும் கால விட்டுக்குறதே இதுக்கு வேலையா போச்சு.. என்ற ரீதியில் சலித்தவாறே வந்த மற்றொரு யானை, சேற்றில் சிக்கிய யானையை முட்டியவாறே காப்பாற்றியது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

தன் நண்பனை பாசத்துடன் காப்பாற்றும் இந்த ஐந்தறிவு ஜீவனின் செயல், ஆறறிவு கொண்ட மனிதனுக்கு பாடமாய் அமைந்தது. 

 இதையும் படிக்க |காவல் உதவியாளரை பாராட்டிய நடிகர் “தாடி பாலாஜி”