நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு...

ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வழக்கமாக ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தொடரில் தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசால், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளன. 

 கடந்த முறை கொரோனா பரவலால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையிலும் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.