கரையை கடக்கும் ’பிபோர்ஜாய்’...தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

கரையை கடக்கும் ’பிபோர்ஜாய்’...தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள மிகத் தீவிர புயலான பிபோர்ஜாய் இன்று மாலை குஜராத் மாநிலத்தில் உள்ள ஜக்காவு துறை முகம் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் மிக அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத்தின் போர்பந்தருக்கு மேற்கு வடமேற்கே சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும்  வடகிழக்கு திசையில் நகர்ந்து குஜராத்தின் மாண்டவி மற்றும் பாகிஸ்தானி கராச்சி இடையே மிகத் தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : காட்டு யானை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுங்கள்...போராட்டத்தில் பொதுமக்கள்!

இதனிடையே, வெப்பச் சலனம் மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக 15, 16, 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.