போதைப்பொருள் வழக்கு....ஷாருக்கானின் மகனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி...

சொகுசுக்கப்பல் இரவு விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கானை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது ...  

போதைப்பொருள் வழக்கு....ஷாருக்கானின் மகனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி...

மும்பையில் இருந்து கோவாவுக்கு இயக்கப்படும் சொகுசுக் கப்பலில் இரவு விருந்து என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்திய  நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான்கான்  உள்பட 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஆர்யான்கான் உள்பட மூன்றுபேரை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அவர்களுடைய காவல் நிறைவடைந்ததால், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஆர்யான்கான் உள்பட மூன்று பேருக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறிய போதைப்பொருள் தடுப்புப் படை, அவர்களை 11 ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது. 

மேலும் சர்வதேச போதை கும்பலுடன் அவர் உரையாடியதற்கான வாட்ஸ் ஆப் ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 7ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நீதிபதியின் இந்த உத்தரவைக் கேட்டதும் ஆர்யான்கான் உள்பட  3 பேரும் கதறி அழுததாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து மூன்று பேரையும் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.