மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 2,500 டன் கோதுமையை அனுப்பி வைத்தது இந்தியா!!

ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 500 டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு  2,500 டன் கோதுமையை அனுப்பி வைத்தது இந்தியா!!

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 50 லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக காபூலுக்கு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீதமுள்ள கோதுமையை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.