மூன்றாவது அலைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை : உலக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

மூன்றாவது அலைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என உலக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மூன்றாவது அலைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை : உலக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நாடு முழுவதும் டெல்டா வகை வைரஸ் பரவி, பெரும் உச்சத்தை தொட்டபோது, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசனையை பெற்று செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பின் குறிப்பிட்ட சில முடிவுகள்  பாராட்டும் வகையில் இல்லை என தற்போது உலக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் டெல்டா பரவல் குறித்து இந்தியா வெளிப்படை தன்மையுடன் செயல்படாத  காரணத்தால்தான் உலக நாடுகளுக்கு தொற்று வெகுவாக பரவியதாகவும் அவர்கள் குறை கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கு எந்த வகையில் தடுப்பு மருத்துகள் வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரியவில்லை என கூறியிருக்கும் அவர்கள், 3-வது அலைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என கூறியுள்ளனர்.