பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்த இந்திய விமானம்...

ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக ஊழியர்களை அழைத்து வந்த இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்த இந்திய விமானம்...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் இன்னும் தூதரகம் செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் தலிபான்கள் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் காந்தகாரில் உள்ள துணை தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.  

அந்தவகையில், சுமார் 50 தூதரக ஊழியர்கள் நாடு திரும்பினர். தூதரக ஊழியர்களை அழைத்து வந்த விமானப்படை விமானம், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள சூழலை மத்திய அரசு  உன்னிப்பாக கவனித்து வருகிறதாக வெளியுறவுத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.