பயம் காட்டும் டெல்டா பிளஸ்... நாளை முதல் புனேவில் புதிய கட்டுப்பாடுகள்...

டெல்டா பிளஸ் தொற்று பரவல் காரணமாக, புனேவில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.

பயம் காட்டும் டெல்டா பிளஸ்... நாளை முதல் புனேவில் புதிய கட்டுப்பாடுகள்...
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு தளர்வுகளில் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி நாளை முதல் புனே நகரில் மாலை 5 மணி வரை, பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்த நேரத்தில் அவசர காலத்திற்கு ஒருவர் மட்டும் வெளியே செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி வரை திறந்து வைக்க அனுமதியளிக்கப் பட்டுள்ளதாகவும், மற்ற கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மால்கள், தியேட்டர்கள், முற்றிலும் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும் உணவங்கள், மதுபான பார்கள், ஓட்டல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி வரை 50 சதவீத இருக்கையுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.