பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றியணைய வேண்டியது அவசியம்: மம்தா பானர்ஜி

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றியணைய வேண்டியது அவசியம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றியணைய வேண்டியது அவசியம்: மம்தா பானர்ஜி

ஐந்துநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பல்வேறு விவாகரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக பலம் பொருந்திய கட்சியாக உள்ளதாகவும், அதனை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். பாஜகவை எதிர்ப்பவர்கள் மட்டுமே கருப்பு பணம் வைத்துள்ளதாக அக்கட்சி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என சோனியாகாந்தி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்குவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.