நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு...! வாயில் கருப்புத்துணிக் கட்டி வியாபாரிகள் போராட்டம்...!!

நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு...! வாயில் கருப்புத்துணிக் கட்டி வியாபாரிகள் போராட்டம்...!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளதை கைவிட வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளில் கருப்புக்கொடி கட்டியும், வாயில் கருப்புத்துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. இதனை எதிர்த்து தினசரி சந்தை வியாபாரிகள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். கடைகளை இடிக்க தடையில்லை என்றும் வரும் 14ந்தேதி வரை கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது செயல்பட்டு வரும் நகராட்சி தினசரி சந்கை கடைகளை இடிக்கமால், வேறு இடத்தில் புதிய சந்தை கட்ட வேண்டும் என்பதனை வலியுறுத்தி நகராட்சி தினசரி சந்தையில் உள்ள கடைகளில் கருப்புக்கொடி ஏற்றிய வியாபாரிகள் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தினசரி சந்தை நன்றாக இருப்பதால் இதை இடிக்கமால், தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு வேறு இடத்தி;ல் புதிய சந்தை கட்ட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.