நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி கிடைப்பதை ராகுல்காந்தியால் பொறுக்க முடியவில்லை: ஸ்மிருதி இரானி  

நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கிடைப்பதை ராகுல் காந்தியால் பொறுத்துகொள்ள முடியாமல் தான் குற்றச்சாட்டு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.  

நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி கிடைப்பதை ராகுல்காந்தியால் பொறுக்க முடியவில்லை: ஸ்மிருதி இரானி   

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின் பகிர்மானம் தொடர்பான பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று பணமாக்குவதன் மூலமே இந்த ரூ.6 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் திரட்ட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன் அறிவித்து இருந்தார்.

 இந்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பாஜக அரசியலுக்காக குற்றஞ்சாட்டி வருவதாக விமர்சனம் செய்தார். கடந்த பல ஆண்டுகளாக கட்டமைத்து உருவாக்கிய அரசின் சொத்துகளை விற்கும் நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொள்வது குறித்து குற்றச்சாட்டினார்.

 ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சொத்துகளைத் தனியாருக்கு குத்தகை அளித்து 6 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தினால், வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என ராகுல்காந்தி அச்சம் தெரிவித்தார்.

 இந்நிலையில், மத்திய அரசின் திட்டத்தினால் நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கிடைப்பதை ராகுல்காந்தியால் பொறுத்துகொள்ள முடியாமல் குற்றச்சாட்டு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.