ஐபோனின் ஆப் ஸ்டோரிலிருந்து 'குரான் மஜீத்' செயலி நீக்கம்.!! காரணம் என்ன..?

சீனா அரசின் உத்தரவை ஏற்று,  செல்போனின் ஆப் ஸ்டோரிலிருந்து குரான் செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

ஐபோனின் ஆப் ஸ்டோரிலிருந்து 'குரான் மஜீத்' செயலி நீக்கம்.!! காரணம் என்ன..?

சீனா அரசின் உத்தரவை ஏற்று,  செல்போனின் ஆப் ஸ்டோரிலிருந்து குரான் செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இஸ்லாமிய மதத்தை சீனா அங்கீகரித்தாலும், அச்சமூகத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக  குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தநிலையில் உலகளவில் பல கோடி  பயனாளிகளால் பயன்படுத்தும், ‘குரான் மஜீத்’ என்ற செயலியை, சீனாவில் பயன்படுத்த அந்நாடு தடை செய்துள்ளது.

அதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களையும் அரசு கேட்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீனாவின் உள்ளூர் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு அந்த செயலியை, அந்நாட்டு  ஆப் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க குர்ஆன் மஜீத் தயாரிப்பாளரான பாகிஸ்தான் டேட்டா மேனேஜ்மென்ட் சர்வீசஸ், சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது.