ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  எதிர்கட்சி  தலைவர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம்...

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  எதிர்கட்சி  தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  எதிர்கட்சி  தலைவர்கள்  குடியரசு தலைவருக்கு கடிதம்...

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தை  பூர்வீகமாக  கொண்ட ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின்  வாழ்வியல் உரிமை பிரச்சனைக்காக குரல் கொடுத்தவர். ஜார்கண்ட் மாநிலம் கோரேகான் வழக்கில் இவர் சிறைபடுத்தப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.  

ஸ்டேன் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் அவருக்கு ஜாமின் கொடுக்காமல் மத்திய பாஜக அரசு செவி சாய்க்காத நிலையில்  மும்பை நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையில்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள் கிழமை  அதிகாலை மரணமடைந்தார் ஸ்டேன் சுவாமி. இவரது மறைவுக்கு  நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் மத்திய பாஜக அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதே போல்  ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. 84 வயதான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன்சாமியின் மரணம் வருத்தத்தைத் தருகிறது" என ஐநா வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த  நிலையில்  ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து குடியரசு தலைவர்  ராமநாத் கோவிந்திற்கு எதிர்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின்,  சரத்பவார் மமதா, பானர்ஜி உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு  காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

.