சீன வெளியுறவு அமைச்சருடன் தலிபான் பயங்கரவாத அமைப்பு சந்திப்பு: உலக நாடுகள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,தலிபான் முக்கிய தலைவர்கள் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சீன வெளியுறவு அமைச்சருடன் தலிபான் பயங்கரவாத அமைப்பு சந்திப்பு: உலக நாடுகள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்க தொடங்கியுள்ளது. இதனால் தலிபான்களின் கைகள் மேலும் ஓங்க தொடங்கி, ஆப்கானிஸ்தானின் நாடுகளை பெரும்பாலும் தங்கள் வசத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிய படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது.

 இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனாவின் உதவியை நாடியுள்ள தலிபான்கள், பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியுடன் நேரில் சந்தித்து இருக்கின்றது. இந்த சந்திப்பின்போது தலிபான் அமைப்பின் முன்னணித் தலைவரான முல்லா தலைமையிலான 9 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்த தலிபான்கள், எதிர்படைகளை வீழ்த்த சீனாவின் உதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது என கூறப்படுகிறது.

 மேலும், சீனா அவ்வாறு உதவி செய்தால் அங்கு ஆப்கானிஸ்தான் அமீரகம் உருவாக்கி நாட்டினை வளர்ச்சிப்படுத்துவோம் எனவும், இஸ்லாமிய பிற பயங்கரவாத அமைப்புகள் வளர்வதை ஊக்குவிக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்திற்கு சீன தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது தொடர்பாக தகவல் இல்லாத நிலையில், சீனா எப்படியென்றாலும் மறைமுகமாக அவர்களுக்கு உதவி செய்யலாம் என உலகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை சீனாவின் உதவி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்து அவர்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்ற நேர்ந்தால், அங்கு ஆப்கானிஸ்தான் அமீரகம் என்ற பெயரில் உருவாகும் மையத்தில் அல்கொய்தா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பிற தாலிபான்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு, அதன் முகாமாக மாற்றி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கும் நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

 ஏற்கனவே எல்லை ஆக்கிரமிப்பு விஷயங்களில் சீனா அடாவடியுடன் செயல்படும் நிலையில், ஆப்கானிஸ்தானை தன்னுடன் இணைக்க அல்லது அங்கு கட்டமைப்புகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் சீனா அதிகம் செலுத்தலாம் என்றும், இது தாலிபானுக்கோ அல்லது சீனாவுக்கோ எதிராக திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகள் பிரச்சனைகள் நடந்து முடியும் போது தான் உண்மையாக தெரியவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.