8 நாட்களாக உணவின்றி தவித்து வரும் பொதுமக்கள்...

சியான் நகரில் போடப்பட்ட ஊரடங்கு எட்டாவது நாளை எட்டிய நிலையில் மக்கள் பலர் உணவுக்கே வழியின்று தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

8 நாட்களாக உணவின்றி தவித்து வரும் பொதுமக்கள்...

சீனாவின் பல நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 13 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வடமேற்கு சீன நகரமான சியானில், தற்போதைய கோவிட்-19 தொற்று அதிகரிப்பை கையாளும் வகையில் கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. 

சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை 156 பேர் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை முந்தைய நாள் 151 ஆக இருந்தது.பாதிக்கப்பட்ட 156 பேரில், 155 -ஐ சேர்ந்தவர்கள். ஒருவர் குவாங்சியின் தெற்குப் பகுதியை சேர்ந்தவர். உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்பட்ட பரவலைத் தவிர, வெளி நாடுகளிலிருந்து வந்த 51 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

டிசம்பர் 9 முதல் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜியானில் 1,117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வியாழன் காலை 10 மணிக்கு ஒரு புதிய சுற்று வெகுஜன சோதனை தொடங்கியது. டெரகோட்டா வாரியர்ஸுக்கு பிரபலமான இந்த நகரத்தில் அனைத்து பொது நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில் இருக்கும் கோவிட் கிளஸ்டர்களைப் பார்க்கையில், சியானில் உள்ள எண்ணிக்கை மிகக் குறைவே. எனினும், இங்குள்ள அதிகாரிகள், இங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளவோ, அல்லது அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட அத்தியாவசிய விஷயங்களுக்காகவோ மட்டும்தான் இந்த நகர மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை இங்கு உள்ளது. இந்தக் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் (Lockdown) மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகவும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் விட்டிற்கு வரும் விநியோகங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 

சியான் அரசாங்க அதிகாரியின் கூற்றுப்படி, மக்களுக்கான பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று அளிக்கும் நிறுவனங்களிடம் போதுமான ஆட்கள் இல்லாததாலும், தேவை அதிகமாக இருப்பதாலும், புதனன்று அங்கு குழப்பம் நிலவியது. இந்த சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.