சென்னை வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

சென்னை வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான,"ஏர் பஸ் பெலுகா  இரவு எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தது.

உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா"என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு வந்தது. இந்த விமானம் குஜராத்திலிருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி, ஏரி பொருள் நிரப்பியது.

நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக வைத்து, ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை  அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு  விமானங்களையும் தயாரித்து  வருகிறது.Airbus Beluga - Wikipedia

இந்த நிலையில், பல்வேறு வடிவிலான, பெரிய ரக பொருட்களை, சரக்கு  விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" (A300-608ST) என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில்  ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்தது. 

இந்த சரக்கு விமானத்தில் ஓரே நேரத்தில்  47,000 கிலோ (47 டன் ) எடை சரக்குகளை ஏற்றி  செல்லும் திறன் உடையது. இந்த ரக பெரிய சரக்கு விமானம், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9:30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தது.Airbus Transport International Airbus A300-608ST Beluga F-… | Flickr

உலகிலேயே மிகப்பெரிய "ஏர் பஸ் பெலுகா" சரக்கு விமானம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, இதைப்போல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்து, எரிபொருள் நிரப்பி விட்டு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டு சென்றது.

இந்த நிலையில் தற்போது ஓராண்டு கழித்து, மீண்டும் அதே ஜூலை மாதம், உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் ஆன, "ஏர் பஸ் பெலுகா" இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது.20+ Airbus Beluga Whale Airbus A300 Air Vehicle Stock Photos, Pictures &  Royalty-Free Images - iStock

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்த தகவல், "ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, சென்னைக்கு நேற்று இரவு வந்தது.விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது.  இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இது, இரண்டாவது  முறை. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் முதல் முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை வந்து எரிபொருள் நிரப்பிய பின், சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பட்டாயாவிற்கு  புறப்பட்டுச்  சென்றது. இப்போது இரண்டாவது முறையாக இந்த விமானம் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது, நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது" என தெரிவத்தனர்.

இதையும் படிக்க: பாதிரியாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக மைக்செட் ஆப்ரேட்டர் புகார்!