பிரதமர் மோடியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு....

பிரதமர் மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நேரில் சந்தித்து பேசினார்.  டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரதமர் மோடியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு....

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோதலில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு எல். முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டாா்.

போட்டியின்றி தேர்வானதை அடுத்து, கடந்த 1-ம் தேதி எம்.பியாக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல். முருகனுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக  எல்.முருகன் தேர்வு செய்யப்பட்ட நிலையில்  பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமர்மோடிக்கு திருக்குறள் புத்தகத்தை எல்.முருகன் வழங்கினார்.