வழக்கத்தை மாற்றியமைத்த மணமகள்...குதிரையில் சென்று இறங்கிய அசத்தல் வீடியோ...!

திருமணக் கோலத்தில் குதிரையில் சென்ற மணமகளின் வைரல் வீடியோ...

வழக்கத்தை மாற்றியமைத்த  மணமகள்...குதிரையில் சென்று இறங்கிய அசத்தல் வீடியோ...!

பீகாரில் மணமகன் வீட்டிற்குத் திருமணக் கோலத்தில் குதிரையில் சென்ற மணமகளின் வைரல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருபவர் தான் அனுஷ்கா குஹா. இவர் பீகாரில் மாநிலத்தில் கயாவில் உள்ள சிஜூர் பகுதியை சேர்ந்த நபரைத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், மணமகள் அனுஷ்கா குஹா  தனது திருமணநாளன்று கல்யாணக் கோலத்தில் ,கயாவில் உள்ள மணமகன் வீட்டிற்குக் குதிரையில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என ஒன்று கூடி ஆட்டம் பாட்டத்துடன் மணமகன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இது குறித்து மணமகளின் தாயாரிடம் கேட்ட போது, அவர் கூறியது சுவாரசியமாக இருந்தது.

அனுஷ்கா சிறுவயதிலிருந்தே, மாப்பிள்ளை மட்டும் ஏன் குதிரையில் ஏறி மணமகள் வீட்டிற்கு செல்லவேண்டும்? ஏன் அதற்கு மாறாக மணமகள் குதிரையில் செல்ல கூடாதா? என்று அடுக்குகளாக கேள்வி எழுப்புவார்.

இதெல்லாம் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் வழக்கங்கள் என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், அவையெல்லாம் அனுஷ்கா-வை ஒருபோதும் திருப்திப்படுத்த  முடியவில்லை. 

அவள் ’எப்பொழுதும் மரபை உடைத்து அதற்கு நேர்மாறாக செயல்படுவேன்’  என்று கூறிக்கொண்டே இருப்பாள். அதன் பிரதிபலிப்பாக தான் தற்போது மணமகன் வீட்டிற்கு குதிரையில் வந்ததாக கூறினார்.